துளிகள்.....
கம்பளி பூச்சியும் பட்டாம் பூச்சியாகும்
இந்த காலம் உனக்கும் சிறகு கட்டும்
தண்டவாளத்தில் குறையும் ரயிலின் வேகம்
என் நெஞ்சில் கூடும் மூச்சின் வேகம்
அடித்துக்கொள்ளும் பார்வையின் தேடல்
நீ வரும் தடயம் தேடியே
சொல்லாத காதல் வலி அறிவாயா
சொன்னபின் பறந்த நொடி அறிவாயா
பார்க்காத நேரத்தின் நீளம் அறிவாயா
பார்த்தபின் கண்ணீரின் ஆற்றாமை அறிவாயா
ஏதோ ஒன்று ஈர்த்தது
இதயம் மெதுவாய் நகர்ந்தது
எதிர் திசையாய் இருந்தாலும்
எங்கோ நெருக்கம்..
கனவா நினைவா புரியவில்லை
கண்ணாடியில் உன் பிம்பம் மறையவில்லை
சுசுகமா வலியா தெரியவில்லை
சுழலும் உலகம் உணரவில்லை
இதயம் இரண்டும் கணக்குதே
இது சொல்லாத காதலின் வலி என்று புரியுதே
சொல்ல அச்சம் தடுத்திடுதே
இருந்தும் நெஞ்சம் துணிந்திடுதே
தூரங்கள் ஏது ..
காதலிலே வாழும் போது..
நாம் பார்க்கும் சூரியன்
செல்லமாய் சிரி
க்
கிறது
நான் பார்க்கும் மேகம்
உனக்காய்
பொழிகிறது
நீ விடும் மூச்சு
என்னை வந்து
தொடுகிறது
நமக்கேயான
அலைவரிசையில்
இருவரின் நாடியும் ஒலிக்
கிறது
நம் உயிரும் இணைந்தே எப்பொழுதும் வாழ்கிறது
நிலவு தரும் நினைவில் நிம்மதியாய் உறங்குவோம்
தூரங்கள் ஏது ..
காதலிலே வாழும் போது..
சின்ன சின்ன வார்த்தை போட்டு
கனவெல்லாம் அதில் கோர்த்து
மனதிலே தொடுத்தேன்
மௌனமாய் மறைத்தேன்
உலகமே அழிந்தாலும்
நாம் மட்டும் வாழ
சுயநலமாய்
வரம் கேட்பேன்
காதல்
நீ கிறுக்கி கொடுத்த கவிதை
நான் கிழித்து போட்ட காகிதம்
ஒரு ஜென்ம தேடலை
ஒரு புன்னகையால் தீர்த்தாய்
நீ வார்த்தைகளுக்கு அகப்படாத கவிதை
எனக்கான தேடலில்
உனக்குள் தொலைந்தேன்
விட்டு சென்றது நீங்கள்
வலிகள் தாங்குவது நாங்கள்
மாண்டவர்கள் மீண்டு வந்தால்
இந்த பூமியே இன்னொரு சொர்க்கம்
விரல் தொடு போதும்
மோதிரம் வேண்டாம்
கை பிடி போதும்
வளையல் வேண்டாம்
மூச்சு தொடு போதும்
மூக்குத்தி வேண்டாம்
செவி கொடு போதும்
கம்மல் வேண்டாம்
நடந்து வா போதும்
கொலுசு வேண்டாம்
பாசம் ஒன்று போதும்
பட்டாடை வேண்டாம்
புன்னகை போதும்
பொன் நகை வேண்டாம்
கண்ணிமைத்தால் போதும்
உன் துணையாய் நானிருப்பேன்
உன் நிழலாய் வாழ்ந்திருப்பேன்..
காதலை நம்பவில்லை
உன்னை நான் காணும்வரை
கடவுளை நம்பவில்லை
உன் அன்பை உணரும்வரை
கண்ணிலே ஈரம்
நெஞ்சிலே பாரம்
ஒருமுறை பாரு
ஓடிவருவேன் நான்
பெயரிலே உன் பாதி
உயிரிலே நீ பாதி
காதலில் மட்டும்
மொழிகள் மௌனமாகும்
மதங்கள் மறந்து போகும்
சாதிகள் இறந்து போகும்
எல்லைகள் கடப்பாய்
நீ சிரித்தால் பூக்களை ரசிக்கிறேன்
நீ பேசினால் மொழியை ரசிக்கிறேன்
உன்னுடன் இருப்பதால் உலகையே ரசிக்கிறேன்
வானம் கொஞ்சம் தூரம்தான்
சிறைகளை திறங்கள்
சிறகுகள் பறக்கட்டும்
கை பிடித்துதானே நடந்து வந்தோம்
சுவடுகளை ஏன் தொலைத்தோம்
நமக்குள்ளும் எதிர்மறை
எனக்கு குளுரினால் உனக்கு வேர்க்கிறது
உனக்கு குளுரினால் எனக்கு வேர்க்கிறது
எப்பொழுது தீரும் thermostat கேட்கிறது
இந்த கண்கள் என்ன சூரியனோ
நான் பனித்துளியாய் கரைகிறேன்..
இந்த புன்னகை என்ன மந்திரமோ
நான் என்னையே இழக்கிறேன்..
என்ன தவம் செய்தேனோ
உன் நிழலில் நான் வாழ
நீ நேசிப்பதற்காகவே
நான் சுவாசிக்கிறேன்
இலக்கியம் தெரியாமல்
இலக்கணம் புரியாமல்
வரலாறு அறியாமல்
மொழி மீது மட்டும் ஏனோ ஒரு ஈர்ப்பு
Home
Subscribe to:
Posts (Atom)