தூரங்கள் ஏது .. காதலிலே வாழும் போது..

நாம் பார்க்கும் சூரியன் செல்லமாய் சிரிக்கிறது
நான் பார்க்கும் மேகம்  உனக்காய் பொழிகிறது
நீ விடும் மூச்சு என்னை வந்து தொடுகிறது
நமக்கேயான அலைவரிசையில் இருவரின் நாடியும் ஒலிக்கிறது
நம் உயிரும் இணைந்தே எப்பொழுதும் வாழ்கிறது
நிலவு தரும் நினைவில் நிம்மதியாய் உறங்குவோம்

தூரங்கள் ஏது .. காதலிலே வாழும் போது..

No comments: